Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

எனது மகனுக்கு இந்த அரசாங்கம் நீதியை பெற்று தர வேண்டும்

பிப்ரவரி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எனது மகனை சுட்டு படுகொலை செய்த பொலிஸாரை பாதுகாக்காது மகனுக்கு நீதியை பெற்று தர இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 10ஆம் திகதி அதிகாலை பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவனுக்கு நீதி கோரியும் , சிறுவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்ய கோரியும் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தின் நிறைவில் , உயிரிழந்த சிறுவன் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எனது கணவர் மதுவுக்கு அடிமையானதால் , எமது குடும்பத்தை மூத்த மகனே உழைத்து பார்த்தார், மேசன் வேலை , மாட்டெரு ஏற்றி விற்பனை செய்தல் போன்ற வேலைகளில் சிறுவயது முதல் ஈடுபட்டு , அந்த வருமானத்தில் தான் எனது ஏனைய 05 பிள்ளைகளையும் கல்வி கற்க வைத்து , எமது குடும்பத்தையும் பார்த்தார்.

அவர் எந்த ஒரு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டவர் இல்லை. அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர் எனில் பொலிஸ் நிலையங்களிலோ , நீதிமன்றங்களிலோ வழக்குகள் இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு எதிராக எந்தவொரு வழக்குகளும் இல்லை.

சாரதி அனுமதி பத்திரமின்றி வாகனம் ஓடியதால் தான் பொலிஸார் மறிக்கும் போது நிறுத்தவில்லை. விபத்துக்களை கூட ஏற்படுத்தவில்லை. வாகனத்தை மகன் நிறுத்திய பின்னரே பொலிஸார் சுட்டுள்ளனர்.

இருவர் சுட்டதாக கூறுகின்றனர். ஆனால் ஒருவரே மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று வாக்கு மூலம் அளித்துள்ளார். மற்றையவர் இது வரையில் செல்லவில்லை.

எனது மகனை சுட்டு கொலை செய்த பொலிசாரை காப்பற்ற பலரும் முயல்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் பேசவில்லை. எனது மகனுக்கு இந்த அரசாங்கமே நீதியை பெற்று தர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுப்பு
அடுத்த செய்தி யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 14 வயது சிறுவனை சித்திரவதை செய்த ஒருவர் கைது

ஏப்ரல் 10, 2026
இலங்கை

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் ஐவர் கைது!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

QR முறைமை சீர் செய்யப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

மார்ச் 17, 2026
இலங்கை

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?