கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்ததோடு நபர் ஒருவரும் இதன்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.
யானையின் அட்டகாசத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்திருந்தனர்.
இதில் யானையால் தாக்கப்பட்ட 65 வயதான நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
