டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலை 18 வயதுடைய ஜெஸ்ஸி வான் ரூட்சலர் (Jesse Van Rootselaar) என்ற மாணவியே முன்னெடுத்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையின் பின்னர் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்ததகவல் வெளியாகியுள்ளது.
அந்த மாணவி, இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின்னர், நானும் தற்கொலை செய்துகொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை, ஜெஸ்ஸி முதலில் தனது சொந்த வீட்டிலேயே தனது தாய் மற்றும் சகோதரனைச் சுட்டுக்கொன்றுள்ளார்.
அதன் பின்னரே அவர் ஆயுதங்களுடன் பள்ளிக்குச் சென்று, தாக்குதலை முன்னெடுத்ததாக, கூறப்படுகின்றது.
மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற ஒரு ஆசிரியரும் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகியுள்ளார்.
இதேவேளை, டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.
இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் ஜெஸ்ஸிக்கு எப்படிக் கிடைத்தன என்பது தொடர்பில், விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
