Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே குற்றத்தை விசாரிக்க முடியாது – கஜேந்திரகுமார்

பிப்ரவரி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமைதான் இந்த நாட்டில் காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

போரற்ற சூழலில், யாழ்ப்பாணத்தில் வீதிகளில் சுதந்திரமாக நடமாட கூடிய சூழலில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு அதனை நியாயப்படுத்த முடியாது.

வாகனம் ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டு , அவர்கள் கட்டளையை மீறி சென்றால் , வாகனத்தை நிறுத்த வைப்பதற்கான நடவடிக்கையை தான் பொலிஸார் மேற்கொள்ள முடியுமே தவிர சாரதியை சுட்டு கொல்ல முடியாது.

வாகனத்தில் மாட்டின் சாணகம் இருந்ததாக பொலிஸார் காண்பித்தமையை பார்த்த வேளை, அது கொண்டு வந்து கொட்டப்பட்டது போன்றே காணப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் , வாகனத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் பொலித்தீன் பை ஒன்றில் சாணகம் காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.

நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளமையால் தான் இவ்வாறான செயல்களில் பொலிஸார் ஈடுபடுகிறனர். அவசர கால சட்டம் ஊடாக பொலிஸார் இராணுவத்தினருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகிறது.

அதனூடாகவே கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் அவசர கால சட்டத்தின் ஊடாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு தம்மை பாதுகாத்தனர்.

ஒரு குற்றவாளியாக இருந்தாலும், பொலிஸார் சுட்டு கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதியான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் எங்கள் நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களே தம் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் துரதிஷ்ட வசமான நிலைமைகள் காணப்படுகிறது. குற்றம் செய்ததாக கூறப்படும் பொலிஸாரே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்(Video)
அடுத்த செய்தி அஜித் பெரேராவின் சொகுசு வீட்டை முடக்கிய விசாரணைப் பிரிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மோடி இன்று இலங்கைக்கு விஜயம் !

ஏப்ரல் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு – சுதந்திரமாக செல்ல அனுமதிக்குமாறு மக்கள் கோரிக்கை!

ஜூலை 20, 2025
இலங்கை

வட்டுக்கோட்டை தோட்ட கிணற்றில் இருந்து தாய் மாமனும் மருமகனும் சடலமாக மீட்பு!

பிப்ரவரி 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு-மன்னார் சொகுசு பேருந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?