முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர மையத்தில் உள்ள கரைத்துரைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மெகா கோப் சிற்றி நிலையம் இம்முறை மாவட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து புனரமைப்பு செய்யப்பட்டு இன்றைய தினம்(11) காலை 9.00 மணிக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், கரைத்துரைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கரைத்துரைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், து.ரவிகரன் , அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் , மேலதிக அரசாங்க அதிபர் , திட்டமிடல் பணிப்பாளர், கூட்டுறவு உதவி ஆணையாளர் கரைத்துரைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் , மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.
