Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கரிநாள் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு

பிப்ரவரி 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களபப்பில் சுதந்திர தினத்தையிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை இன்று புதன்கிழமை (4) சென்ற கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை கோட்டமுனை பாலத்தில் வைத்து பொலிசார் தடுத்து நிறுத்தியதையடுத்து பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல் நிலையடுத்து அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்நாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போண உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.

இதனை தொடர்ந்து சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களின் கரிநாள் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரி எனும் தொனிப் பொருளில் காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம். எமது மண் எமக்கு வேண்டும், போன்ற அரசுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்காவை நோக்கி ஆர்ப்பாட ஊர்வலமாக சென்றனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள முக்கிய சந்திகளில் பொலிசார் மற்றும் கலகம் அடக்கும் பொலிசார் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட வந்த நிலையில் கோட்டமுனை பாலத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களை பொலிசார் காந்தி பூங்காவிற்கு செல்ல முடியாது அங்கு 78 வது சுதந்திர தின நிகழ்வு ஒன்று இடம்பெற்று வருகின்றது.

எனவே அங்கு இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றது எனவே அங்கு செல்ல முடியாது நீங்கள் பிரதான பஸ்தரிப்பு நிலையம் சென்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு பொலிசார் தெரிவித்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டகார்கள் இல்லை எங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது இந்த வீதியால் சென்று காந்தி பூங்கா முன்னாள் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம் சென்று அங்கிருந்து பிரதான பஸ் நிலையம் பகுதிக்கு செல்ல வழிவிடுமாறு பொலிசாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்டதையடுத்து பொலிசாருக்கும் ஆர்பாட்டகார்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்கள் அங்கு வீதியில் அமர்ந்திருந்து; பகல்12.00 மணிவரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 பிப்ரவரி 2026
அடுத்த செய்தி சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் பறக்கவிடப்பட்ட சமாதான புறாக்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூற வேண்டும் – மூத்த போராளி மனோகரன்

நவம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை

ஏப்ரல் 11, 2026
இலங்கை

இலஞ்சம் கேட்ட பொலிஸ் அதிகாரி கைது!

ஜூலை 24, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் புதிய நோய் கண்டுப்பிடிப்பு ….

ஏப்ரல் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?