Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் விளையாட்டு மைதானத்தில் மத சிலை

பிப்ரவரி 3, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னார் சாந்திபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் தனி நபர் ஒருவரால் எந்த ஒரு அனுமதியும் இன்றி மத சிலை ஒன்று வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சாந்திபுர விளையாட்டு கழகத்தினால் குறித்த மைதானத்தில் சிலை வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நகரசபை தலைவர் குறித்த விளையாட்டு மைதானத்துக்கு முன்பு தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் சிலை மாற்றி வைக்கப்பட்டதுடன் உரிய அனுமதி கிடைத்தால் மாத்திரம் சிலை வைக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து கடந்த மாதம் இடம் பெற்ற மன்னார் நகரசபை அமர்வில் குறித்த சிலை வைத்த விடயம் தொடர்பாக பேசப்பட்ட நிலையில் இரு உறுப்பினர்கள் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி யிருந்தனர்.

ஆனால் அங்குள்ள இளைஞர் கழகம் சிலை வைப்பதற்கு அனுமதிக்க வில்லை எனவும் காந்திபுரத்தில் உள்ள சில பொது அமைப்புகள் மாத்திரம் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு இல்லை என கடிதம் வாங்கியிருப்பதாகவும் எனவே இது ஒரு முரண்பாடான விடயம்.

எனவே உரிய அமைச்சு மற்றும் ஆளுநரிடம் அனுமதிக்கு அனுப்பி பின்னர் அனுமதி வழங்க வேண்டும் என தவிசாளர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னனியில் நேற்றைய தினம் எந்த ஒரு அனுமதியும் இன்றி உரிய தரப்புக்கு அறிவிக்கப்படாமல் மீண்டும் குறித்த சிலை விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டு கழக பிரதிநிதிகள் மன்னார் நகரசபை தலைவரிடம் வினவியபோது அதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும் சபையில் அனுமதி கிடைத்து விட்டதாகவும் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நகரசபை செயலாளரிடம் இளைஞர் கழக உறுப்பினர்கள் வினவியபோது இவ்வாறான சிலைகள் வைப்பதற்கு சபை அனுமதி வழங்கவில்லை என்றும் அவ்வாறு வழங்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் விளையாட்டுக்காக மைதானத்தை பயன்படுத்து விளையாட்டுக்கழகம் மற்றும் உரிய அரச நிறுவனங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாது குறித்த சிலை வைக்கப்பட்டுள்ளமை விமர்சனத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

குறித்த சிலை முன்னதாக மாற்றி வைக்கப்பட்ட தனியார் காணியில் இருந்த போது எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அதே நேரம் குறித்த சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் அதே மத சிலையும் 500 மீற்றர் தூரத்தில் அதே கோவிலும் இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் விளையாடும் மைதானத்தில் ஏன் இந்த செயல்பாடு என இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முந்தைய செய்தி யாழில். சர்வதேச ஈர நில தின கொண்டாட்டம்
அடுத்த செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 பிப்ரவரி 2026

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் நடமாடும் சேவை ஆரம்பம்

ஆகஸ்ட் 14, 2025
இலங்கை

வோல்கர் டர்க்கின் அறிக்கைக்கு பதிலளித்தது இலங்கை!

செப்டம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பல்லேகலே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து!

நவம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு பகுதியில் பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்!

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?