கியூபெக் மாகாணத் தேர்தலில் பிரிவினைவாதக் கட்சியான ‘பார்ட்டி கியூபெக்வா’ (Parti Québécois – PQ) வெற்றி பெற்றால், அது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஒரு “பேரழிவாக” (Disaster) அமையும் என ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் எச்சரித்துள்ளார்.
ஒட்டாவாவில் நேற்று மாகாண முதல்வர்களின் கூட்டம் நடைபெற்றது.
அதற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய டக் ஃபோர்ட், கியூபெக் அரசியலில் நிலவும் பிரிவினைவாதப் போக்கு குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், கனடா இப்போது ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இந்தக் காலப்பகுதியில், நாட்டைப் பிரிக்க நினைக்கும் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது கனடாவுக்கு மட்டுமல்ல, கியூபெக் மக்களுக்கும் நல்லது அல்ல” என டக் ஃபோர்ட் தெரிவித்தார்.
