Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஜனவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடன் கொண்டுவருமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்குத் தான் யோசனை தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் சுயாதீனமாகச் செயற்படத் தவறியுள்ளதோடு, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பேசுவதற்கு இடமளிக்காமல் ஜனநாயக விரோத முறையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இதற்கு முன்னரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் பொதுநலவாய நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற ஒன்றியங்களுக்கு முறைப்பாடு அளித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகர் தனது கடமைகளைச் சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கையில் அப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணியை எவ்வித விசாரணையுமின்றித் தன்னிச்சையாக இடைநிறுத்தியுள்ளமையானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான பாரிய தாக்குதலாகும் எனவும், இதனால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாகக் கொண்டு வருவது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காது நாட்டின் கணக்காய்வு மற்றும் சட்டமா அதிபரின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதன் மூலம் சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி வருவதாகவும், இப்போது நாடாளுமன்றத்தின் மீதும் இத்தகைய அழுத்தங்களைச் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது மிகவும் பாரதூரமான நிலைமை எனக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்படும் அனைவரும் இதற்கு எதிராக முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முந்தைய செய்தி நிபா வைரஸ் அச்சுறுத்தல் – கண்காணிப்பு தீவிரம்
அடுத்த செய்தி மியன்மார் பொதுத்தேர்தல் – இராணுவ ஆதரவுடன் ஆட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் பாடசாலையின் உட்கட்டமைபை விருத்தி செய்ய நடவடிக்கை.

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அற்புதன் , மகேஸ்வரி , ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பி யினரே – முன்னாள் உறுப்பினர் தெரிவிப்பு

செப்டம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 9 மே 2025

மே 9, 2025
இலங்கை

நாட்டில் பதிவான வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

ஜனவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?