Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது….

ஜனவரி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தெஹிவளையில் கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால், நேற்று கொட்டாவ காவல்துறை பிரிவில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி தெஹிவளை, வேரத்தன்ன வீதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாவது துப்பாக்கிதாரியாக இவரே செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியைப் பயன்படுத்திய மற்றுமொரு சந்தேகநபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 2013ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகிய ஒரு முன்னாள் இராணுவ உறுப்பினர் ஆவார்.

அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், தெஹிவளைப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கியையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 30ஆம் திகதி கொஹுவலை காவல்துறை பிரிவில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்த கொலை முயற்சிச் சம்பவத்துடனும் இவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றின் வழிகாட்டலின் கீழேயே இந்த இரண்டு குற்றங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

முந்தைய செய்தி பிரதமர் மார்க் கார்னி ஆற்றிய உரைக்கு பியர் பொய்லிவ்ரே விமர்சனம்
அடுத்த செய்தி கல்லடி பாலத்தில் இருந்து குதித்து யுவதி தற்கொலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

டிசம்பர் 5, 2025
இலங்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி அறிவிப்பு!

செப்டம்பர் 19, 2025
இலங்கை

கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டம் குறித்து வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை!

டிசம்பர் 24, 2025
இலங்கை

பலாங்கொடை தீப்பரவலில் 1000ஏக்கர் வனப்பகுதி அழிந்துள்ளது!

செப்டம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?