Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் வறுமையான மக்களுக்கு உதவிளை வழங்குவதே எமது நோக்கம் – என்.எம்.எம்.பாரிஸ்

ஜனவரி 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற 5 ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கட்சி பேதங்களின்றி உதவிகளை வழங்குவதே எமது முதல் கட்ட இலக்கு என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட பிரதான அமைப்பாளர் என்.எம்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (14) மாலை மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சின்ன வலயன்கட்டு கிராமத்தில் இடம்பெற்றது.

இதன் போது முதல் கட்டமாக குறித்த கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த பின் உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் 5 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வறிய குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவிகளை மேற்கொள்வதே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதல் திட்டமாக உள்ளது.முதலாவது ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (14) மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வலயன்கட்டு கிராமம் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமம் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்த மக்களை யாரும் கண்டு கொள்வதில்லை.நாங்கள் முன் மாதிரியாக நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கிராமத்தை முதல் கட்டமாக தெரிவு செய்துள்ளோம்.

எதிர்வரும் காலத்தில் வலயன்கட்டு கிராமம் விழிப்பான கிராமாக மிளிரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எதிர்வரும் காலங்களில் உங்களை தேடி பலர் வருகை தர உள்ளனர்.எங்களுடைய திட்டத்தின் கீழ் வறுமையில் உள்ள அனைவருக்கும் உதவிகள் வழங்கப்பட உள்ளது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு கட்சி பேதங்களை கடந்து நாங்கள் உதவிகளை முன்னெடுக்க உள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்
அடுத்த செய்தி மன்னாரில் களையிழந்த தைப்பொங்கல் வியாபாரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட தமிழரசுக்கட்சி உத்தேசம்…..

மார்ச் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாணமையில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி சென்ற மூவர் கைது

மே 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர சபை அமர்வில் நாவடக்கம் இன்றி மோதிக்கொண்ட முதல்வர்கள்

ஜூலை 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உரும்பிராயில் பொன்.சிவகுமாரனின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி!

ஜூன் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?