மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் ஸ்தாபகத் தலைவர் அமர் பெரியசாமி சந்திரசேகரனின் 16 வது சிரார்த்தத்தின நிகழ்வு இன்றையதினம் ஹட்டன் மலையக மக்கள் முன்னணி தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.
குறித்த இந்நிகழ்வானது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த சிரார்த்த தின நிகழ்வில் பேராசிரியர் கலாநிதி எஸ்.ஏ. சந்திரபோஸ் நினைவு பேருரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
