Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கறுப்பு பட்டி அணிந்து பிரதேச சபை அமர்வு – தேசிய மக்கள் சக்தியினர் மறுப்பு!

டிசம்பர் 31, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண்டித்து வலி. வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியினரை தவிர ஏனைய உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டனர்.

வலி. வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது, கடந்த 21ஆம் திகதி தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் மற்றும் வேலன் சுவாமி , வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் ஆகியோருடன் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் என ஐவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , நீதிமன்றினால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்
அந்நிலையில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றனர்.
குறித்த சம்பவங்களை கண்டித்து , பொலிசாரின் அடாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து , வலி வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தவிர ஏனைய கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்தவாறு சபை அமர்வில் கலந்து கொண்டனர்.
அதேவேளை கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் , தையிட்டியில் கட்டப்பட்டுள்ளது சட்டவிரோதமான கட்டடம் தான். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பேதமின்றி போராடுவது என்றால் நாமும் போராட்டத்தில் கலந்து கொள்வோம் என சபையில் கூறிய தேசிய மக்கள் சக்தியின் சபை அமர்வு முடிந்து மூன்றாம் நாள் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ளாது , காங்கேசன்துறை கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பொலிஸாருடன் இணைந்து சிரமதான பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையே , தையிட்டி விகாரை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் அடக்கு முறைகளை பிரயோகித்து , வலி. வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவரை கைது செய்திருந்தனர்.
போராட தாமும் வருவதாக உறுதி அளித்த தேசிய மக்கள் சக்தியினர் போராட்டத்தில் கலந்து கொள்ளாது காலை வாரி இருந்தாலும் , தமது சக உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டமைக்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி நல்லூர் சிவன் கோவிலில் புட்டு திருவிழா!
அடுத்த செய்தி களுத்துறை மருத்துவமனைக்குள் துப்பாக்கிச்சூடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

ஜூன் 7, 2025
இலங்கை

புலம்பெயர்ந்துள்ள சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் உதவி.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த உத்தரவு

மே 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!

ஜூலை 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?