Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ். நகர் பகுதியில் இறைச்சிக்கு தட்டுப்பாடு

டிசம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நத்தார் தினத்தில் தமது வியாபாரத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் மண் அள்ளி போட்டு விட்டதாகவும் அதனால் தாம் இன்றைய தினம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் , யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாட்டிறைச்சி கடை நடாத்தும் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான கொல்களத்தில் அனுமதியற்ற முறையில் மாடுகளை இறைச்சியாக்கும் நோக்குடன் இரண்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகளை கட்டி வைத்திருந்த நிலையில் , மாநகர சபையினர் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு அந்த மாடுகளை மீட்டிருந்தனர்.

இதனால் நத்தார் தினமான இன்றைய தினம் யாழ் . நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மாட்டிறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனைக்கு இல்லாது போனது. குறித்த கடைகளுக்கு இந்த கொல்களத்தில் மாடுகள் இறைச்சியாக்கப்பட்டே எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில் , கடைகளில் இறைச்சி இல்லாததால் , யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் இறைச்சி வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் , சில கடைகளில் வேறு கொல்களத்தில் இறைச்சியாக்கப்பட்ட மாட்டிறைச்சி அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

மாடுகளை இறைச்சியாக்க மாநகர சபையினர் தடுத்துள்ளதை அறிந்து , மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் , இன்றைய தினம் வியாபாரம் அதிகமாக நடக்கும் என நினைத்து அதிக விலைகளுக்கு மாடுகளை வாங்கியுள்ளோம். இன்றைய தினம் அவற்றை விற்க முடியாது விட்டால் தாம் பெரும் நஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். எமது வியாபாரத்தில் மண் அள்ளி போடாதீர்கள் என மாநகர சபையினருடன் தர்க்கப்பட்டனர்.

மாநகர சபையினர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் மாடுகளை அழைத்து செல்லுங்கள் என உறுதியாக கூறியுள்ளனர்.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்தி யாழில் விபத்து – மூவர் படுகாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா

செப்டம்பர் 8, 2026
இலங்கை

வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!

ஜூன் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் கலாச்சார பிரதிபலிப்புடன் இயங்கவுள்ள யாழ்.சிற்றி ஹோட்டல்

மார்ச் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?