Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஒலுமடுக்குளம் உடைப்பெடுப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்

டிசம்பர் 18, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள, ஒலுமடு கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட, ஒலுமடுக்குளம் வெள்ள அனர்த்தம் காரணமாக உடைபெடுத்துள்ளதால் தாம் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளதாக அதன் கீழ் நெற்பயிற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்திருந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இன்று (17.12.205) குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் குறித்து ஆராய்ந்துடன், குளத்தின் சீரமைப்பு வேலைகளை விரைந்து ஆரம்பிக்குமாறு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறிப்பாக ஒலுமடுக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் பருவமழை தொடங்கியபிற்பாடு, பொருத்தமற்ற காலப்பகுதியில் ஒப்பந்ததாரர் தொடங்கியதன் காரணமாகவே குறித்த குளம் உடைப்பெடுத்ததாக இதன்போது விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.

இதனால் குறித்த குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள 150விவசாயிகளின் 280ஏக்கர் பெரும்போக நெற்செய்கை எதிர்வரும் நாட்களில் நீரின்றி பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

எனவே குறித்த குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைகளைப் பாதுகாக்கும்பொருட்டு, எதிர்வரும் நாட்களில் பெய்யும் மழைநீரையாவது குளத்தில் சேகரிக்கும் நோக்குடன், உடைந்துள்ள குளக்கட்டின் பகுதியை தற்காலிகமாகச் சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்மெனவும் இதன்போது விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

இந்நிலையில் குறித்த குளம் வெள்ள அனர்த்தத்தின்போது உடைப்பெடுத்துள்ள நிலையில், நிரந்தரமான சீரமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்குரிய முன்மொழிவுகளை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவப் பிரிவு உரிய தரப்பினருக்கு வழங்கியுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் விவசாயிகளிடம் தெரியப்படுத்தினார்.

மேலும் குறித்த குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைகளைப் பாதுகாக்கும் நோக்கில், குளக்கட்டினை தற்காலிகமாக சீரமைப்புச் செய்து நீரைச் சேகரிப்பதற்குரிய வேலைகளை முன்னெடுப்பதுதொடர்பில் கமநல சேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தொலைபேசி அழைப்பெடுத்துப் பேசியிருந்தார்.

இதன்போது கமநல சேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பதிலளிக்கையில்,

தொடர்மழை பெய்துவருவதால் தற்போது தற்காலிக்சீரமைப்பு வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.

குறிப்பாக குளக்கட்டினை தற்காலிகமாக்சீர்செய்வதற்குரிய உள்ளீடுகளையும், இயந்திரங்களையும் கொண்டுசெல்வதற்கு பாதைப்பிரச்சினை காணப்படுவதாக இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் சுட்டிக்காட்டினார்.

எனவே தொடர்ச்சியாக மூன்றுநாட்கள் மழையற்ற வானிலை நிலவினால், ஒப்பந்ததாரருடன் தாமும் கலந்துரையாடி விரைவாக குளக்கட்டினை தற்காலிகமாகச் சீர்செய்வதற்குரிய ஏற்பாட்டினை தாம் முன்னெடுப்பதாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி காத்தான்குடியில் இளைஞனொருவன் மீது கத்திக்குத்து தாக்குதல்
அடுத்த செய்தி மாநகர சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மக்களிடம் கோரிக்கை விடுத்த சண்முகராஜா ஜீவராஜா!

ஏப்ரல் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாகரையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது

ஜனவரி 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுதுங்கள் – தம்பிராஜா

ஏப்ரல் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி விவகாரத்தில் மரபனு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க பணிப்பு!

ஏப்ரல் 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?