Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

டிசம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா பொதிகளுடன், மரைன் போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொண்டி அடுத்த முள்ளிமுனை கடற்கரையிலிருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு முள்ளிமுனை முக துவார கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மரைன் போலீசாரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து மரைன் போலீசார் தீவிரமாக தேடினர்.

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டையில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை தேவிபட்டினம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து எடை போட்டுப் பார்த்தபோது அதில் 150 கிலோ கஞ்சா இருந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த மரைன் போலீசார் கடத்தலில் ஈடுபட்ட முள்ளிமுனை பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.25 லட்சம் எனவும் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என மரைன் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை!
அடுத்த செய்தி ஹெரோயினுடன் ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு – காலி முகத்திடல் நீராட சென்று கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ட்ரம்பின் நடவடிக்கைகளை கண்டிக்கிறேன் – ரணில் தெரிவிப்பு!

மார்ச் 2, 2026
இலங்கை

மண்டைதீவு புதைகுழி வழக்கு

டிசம்பர் 16, 2025
1
இலங்கை

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட நான்கு சபைகளுக்கு கட்டுப்பணத்தை செலுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

மார்ச் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?