மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 பேர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை பதிவு செய்ய பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அவசர அனர்த்த நிலைமை காரணமாக காணாமல் போன ஒருவரைப் பற்றி 2 வாரங்களுக்குப் பின்னரும் தகவல் கிடைக்கவில்லை என்றால்,இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை காணாமல் போன 203 நபர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈட்டுப் பணத்தை விரைவில் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இந்தச் சான்றிதழ்களை வழங்க அந்தத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
, பிரதேச செயலாளரினால் அங்கீகாரத்துக்காக அனுப்பப்படும் விண்ணப்பத்தை, பதிவாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிராந்திய பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகம் அங்கீகரிப்பார்.
இதேவேளை, மத்திய மாகாண மக்களுக்காக இறப்புச் சான்றிதழ் விநியோகித்தல், காணாமல் போனவர்களின் இறப்புச் சான்றிதழ் விநியோகித்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் விசேட நடமாடும் சேவையொன்று நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
