இலங்கையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ள நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பேணுவதற்காக இந்த வான்கதவு திறக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரக்கூடிய வானிலை அறிக்கையின் படி, நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றிலுள்ள நீர் மட்டம் குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


