இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக பல்வேறு நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்ற நிலையில் தமிழக அரசு இன்னும் நிவாரண பொருட்கள் வழங்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதன்படி மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை வழங்கியுள்ளதோடு தமிழக அரசின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியதாகவும், தமிழக முதல்வர் மற்றும் தமிழ்நாடு அரசின் முழு ஒத்துழைப்பு உறுதியளிக்கப்பட்டதாகவும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.


