உக்ரைன் மீதான ரஷ்யாவின் சுமார் நான்கு ஆண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் இராஜதந்திர நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy), பாரிஸில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனைச் சந்தித்தார்.
இதேவேளை, உக்ரைனிய மற்றும் ஐரோப்பியத் தற்காப்புத் துறைத் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஆதரவுடனான சமாதானத் திட்டத்தில் அடங்கியுள்ளதாகக் கூறப்படும், ரஷ்யாவுக்கு உக்ரைனியப் பகுதிகளை விட்டுக்கொடுக்கும் அல்லது போர்க் குற்றங்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் எந்தவொரு நிபந்தனையையும் நிராகரிப்பதற்காக, ஐரோப்பிய நாடுகள் தமது ஆதரவை உக்ரைனுக்கு வலுப்படுத்தி வருகின்றன.
அமெரிக்காவும் உக்ரைனும் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இந்த இராஜதந்திர நகர்வுகள் நடைபெறுகின்றன. விரைவில் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்திக்கவுள்ளனர்.
2022இல் ரஷ்யா இணைத்துக்கொண்ட நான்கு பிராந்தியங்களிலிருந்தும் உக்ரைனியப் படைகள் வெளியேறினால் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
