சீரற்ற வானிலை காரணமாக மருதங்கேணி பகுதியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் .பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் உயிரழந்துள்ளார்.
பொன்னாலை கடலில் நேற்று மீன்பிடி நடவடிக்காக சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இதேவேளை நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
யாழ் பலாலி பொலிஸ் நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொலிசார் பல்வேறு சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்
யாழ் பலாலி பகுதியில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதால் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது
