யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மது அருந்தச் சென்ற நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற இக் கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மீது தாக்குதல் நடத்திய இருவரும் தலைமறைவாகியிருந்த நிலையில் அவர்களுள் ஒருவர் இன்று காங்கேசன்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்
விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
