தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதல் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடங்கவுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் காலை 11 மணிக்கு உள்ளரங்கு கூட்டமாக நடைபெறவுள்ளது.
நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2,000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்களென அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

