தங்காலை – உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்றையதினம் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் 68 வயதுடைய நபர் மற்றும் 59 வயதுடைய அவரது மனைவியும் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரிகள் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் புலப்பட்டுள்ளது.
