பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முத்தரப்பு இருபதுக்கு – 20 தொடரில் பங்கேற்பதிலிருந்து அணித்தலைவர் சரித் அசலங்க மற்றும் வேகப் பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோர் விலகியுள்ளனர்.
இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக இலங்கைக்குத் திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் விலகலையடுத்து, அணியின் தலைமைப் பொறுப்பை தசுன் ஷானக ஏற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
