பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள், மாணவர் விசாவிலிருந்து இன்னோவேட்டர் நிறுவனர் விசாவுக்கு நாட்டிலிருந்து வெளியேறாமல் நேரடியாக மாற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது இம்மாதம் 25ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பதாக தொழில் முனைவோர் இலக்குடன் இருந்த மாணவர்கள் இன்னோவேட்டர் நிறுவனர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டியது கட்டாயமாக இருந்தது.
எனினும், புதிய விதிமுறைகள் அதனை மாற்றியமைத்துள்ளதுடன் இதன்மூலம் பட்டதாரிகள் தங்கள் விண்ணப்பங்கள் செயலாக்கப்படும் வரை பிரித்தானியாவிலேயே தங்கியிருக்க முடியும்.
