அமெரிக்கா அரச நிர்வாகம் முடக்கம் தொடர்பாக, ஜனநாயகக் கட்சியினருடன் விரைவில் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், அரச துறைகளுக்கான நிதியை விடுவிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிதி முடக்கத்தால், 6.70 இலட்சம் அரச ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். மேலும்
அதே நேரத்தில், 7.30 இலட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால், அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அரச துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன
அரச நிர்வாகம் முடக்காததால் , அமெரிக்கா முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஊதியமின்றி தவிக்கும் நிலையில் உள்ளனர். என்பது குறிப்பிடதக்கது.
