வவுனியா, பூம்புகார் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண்ணின் தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய வேளையில் மகள் சடலமாக இருந்துள்ளார்
குறித்த பெண்ணின் கழுத்துப் பகுதி கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
