மெக்சிக்கோவில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை மெக்சிக்கோவில் ஐந்து மாநிலங்களை பாதித்துள்ளது, இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
