புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் ஜஸ் போதைப்பொருளுடன் கள உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவசம லெவலன் தேயிலை தோட்டத்தை பராமரிக்கும் கள உத்தியோகத்தர் ஒருவர் லெவலன் தோட்டத்தில் உள்ள அவரது விடுதியில் இருக்கும் சந்தரப்பத்தில் பொலிஸாரால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவர் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்து கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.