இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை இன்று மாத்திரம் 20,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
இதன்படி, இன்று (22) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி 22 கரட் தங்க பவுனொன்று 322,000 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 410,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 350,000 ரூபாவாகக் குறைவடைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 60,000 ரூபா குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.