ஒட்டாவாவில் அண்மையில் ஐந்து நபர்களுக்குத் தட்டம்மை (Measles) நோய் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அந்த நகரத்தின் பொதுச் சுகாதாரத்துறை (Ottawa Public Health – OPH) இரண்டு உள்ளூர் தேவாலயங்களுக்குச் சென்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2025 இன் ஆரம்பப் பகுதிகளில் இந்த இடங்களில் அவர்கள் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தட்டம்மை ஒரு தீவிரமான மற்றும் மிகவும் பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்று ஆகும்.
ஐந்து நபர்களுக்கும் அம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஒட்டாவா பொதுச் சுகாதாரத்துறை நேரடியாகத் தொடர்புகொண்டு வருகிறது.
இருப்பினும், உரிய தொடர்புகளைக் கண்டறிய முடியாத அல்லது தொடர்புத் தகவல் இல்லாத நபர்களைச் சென்றடைவதற்காக, இந்த பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.