ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் தேடப்பட்டு வந்த ஒரு வயது பெண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிராம்ப்டன் பகுதியில் நடந்த ஒரு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவரும் அந்தக் குழந்தையைக் கடத்திய அதன் தந்தையுமான சந்தேகநபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பீல் பிராந்திய காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒன்ராறியோ மாகாண காவல்துறை (OPP) குழந்தையைத் தேடுவதற்கான அவசர எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டது.
எனினும், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு குழந்தை மீட்கப்பட்டதால், அந்த அறிவித்தல் ரத்து செய்யப்பட்டது.
மீட்கப்பட்ட அந்த ஒரு வயது பெண் குழந்தை தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் பீல் பிராந்திய காவல்துறை உறுதிப்படுத்தியது.