உக்ரைனுக்கு மீளக் கட்டமைத்து வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட இலகு ரக கவச வாகனங்களுக்கான (LAVs) ஒப்பந்தத்தை, கனடா அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
ரஷ்யாவுடனான போரில் பெரும் இழப்புகளைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு இது பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்கின்டி, இந்த புனரமைப்பு ஒப்பந்தம் ‘செயலற்றதாக்கப்பட்டு’ விட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
பயன்பாட்டில் இல்லாத துருப்புக்களை ஏற்றிச் செல்லும் 25 கவச வாகனங்களின் மறுசீரமைப்பு பணியானது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்டாரியோவைச் சேர்ந்த அர்மாட்டெக் சர்வைவபிலிட்டி (Armatec Survivability) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பான ஒப்பந்தமே தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை அமைச்சர் மெக்கின்டி வெளியிட மறுத்துவிட்டார்.
உக்ரைனுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவியை நிறுத்தியதற்கு, லிபரல் கட்சி அரசாங்கம், எந்தவித காரணமும் கூற மறுப்பது, எதிர்க்கட்சிகளிடையே விமர்சனத்தை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது