உலகின் மிகவும் புகழ்பெற்ற வரலாற்றுப் படைப்புகளையும், ‘மோனாலிசா’ ஓவியத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் நெப்போலியன் காலத்தைச் சேர்ந்த நகைகள் திருடப்பட்டதையடுத்து, அந்த அருங்காட்சியகம் திடீரென மூடப்பட்டுள்ளது.
இது ஒரு திட்டமிட்ட கொள்ளை” என்று பிரான்ஸின் உள்துறை அமைச்சர் (Laurent Nunez) தெரிவித்துள்ளார்.
திருடியவர்கள் ஹைட்ரோலிக் ஏணி ஒன்றைப் பயன்படுத்தி அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து, “விலைமதிப்பற்ற நகைகளை” திருடிச் சென்றுள்ளனர்.
திருடியவர்கள் “வெட்டும் கருவி” மூலம் ஜன்னல் கண்ணாடிகளை வெட்டி உள்ளே நுழைந்துள்ளதாகவும் இந்தத் திருட்டுக்கு முன்னரே திட்டமிட்டிருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் வெறும் “ஏழு நிமிடங்கள்” மட்டுமே நடந்ததாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நெப்போலியன் மற்றும் பேரரசியின்” நகைத் தொகுப்பிலிருந்து “ஒன்பது பொருட்களை” திருடிச் சென்றுள்ளனர்
உலகப் புகழ்பெற்ற இந்த அருங்காட்சியகம், இந்தச் சம்பவம் குறித்து இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை. திடீரென மூடப்பட்டமைக்கு “விசேட காரணங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.