பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சு பதிவுகளை வெளியிட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
முஹரம் பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாப் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களைப் பதிவிடும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாகாண ஆளுநர் மரியம் நவாஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இத்துடன், முஹரம் பண்டிகையின்போது, பிரிவினைவாதத் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுவதால், பஞ்சாப் மாகாணம் முழுவதும் பதாகைகள், போஸ்டர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.