Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இஷார செவ்வந்தி கைது தொடர்பாக நாமல் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

அக்டோபர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைப் போலவே, இந்த விடயத்தையும் அரசாங்கம் அரசியலாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்டமை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நாமல் ராஜபக்ச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“இந்த பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும். இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தேடப்படும் பல நபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி 17 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக துணை அமைச்சரே தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தக் கடவுச்சீட்டுகள் யாருடையவை என்பதை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. துறைமுகத்திலிருந்து ஆய்வு செய்யப்படாத 323 கொள்கலன்களை விடுவித்தவர்கள் யார்? என்ற விவரங்களை வெளியிடவில்லை.

தயவுசெய்து இந்த சம்பவங்களையும் விசாரிக்க” வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்த விடயங்களை விசாரித்து பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுத்தினார்.

இந்த விடயங்களை அரசியலாக்கக்கூடாது என்றும் நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி சாவகச்சேரிப் பெண்ணின் இரகசியம் தொடர்பில் தகவல்
அடுத்த செய்தி கரூர் சம்பவத்திற்கான நினைவேந்தலை நடத்த விஜய் திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியானது!

செப்டம்பர் 29, 2025
இலங்கை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் கௌ பே திட்டம் ஆரம்பித்து வைப்பு

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு !

செப்டம்பர் 17, 2025
இலங்கை

தேசிய யூடோ போட்டியில் துணுக்காய் தேறாங்கண்டல் அ. த. க. பாடசாலை வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை!

செப்டம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?