Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வேப்பங்குளத்தில் அரச ஊழியர்கள் போராட்டம்

அக்டோபர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டு திட்டத்திற்கு செல்லும் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதம் அடைவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று கவனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள கருங்கல்குவாரி ஒன்றிலிருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் சென்று வருவதனால் சிறிய வீதியாக உள்ள குறித்த வீதி தற்போது சேதமடைந்து மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் மாற்றம் அடைந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதை அனுமதிக்க வேண்டாம் எனக் கூறியும் அப்பகுதி மக்கள் இதன் காரணமாக விபத்துகளுக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமந்தை வேப்பங்குளம், விளாத்திக்குளம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வீதியை ஊடறுத்து செல்லும் புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவையின்மை மற்றும் புகையிரதம் பெறுகின்ற போது சமிக்ஞைகள் இல்லை எனவும் இதன்போது தெரிவித்திருந்ததுடன் அதனை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடியதோடு இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் ஒரு மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.

அங்கு வருகை தந்த ஓமந்தை பொலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களோடு கலந்துரையாடியதுடன் பிரதேச சபை தலைவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கற்குவாரியின் உரிமையாளர்களை அழைத்து இது தொடர்பில் ஒரு முடிவை எட்டுவதாக தெரிவித்திருந்தனர்.

இதன்பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதோடு பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்குச் சென்று கல்குவாரியை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு
அடுத்த செய்தி அரியாலையை குப்பை மோடாக மாற்ற மாட்டோம் – நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உறுதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

தலதா மாளிகையில் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு சிக்கல்-கைது செய்ய நடவடிக்கை!

செப்டம்பர் 9, 2024
இலங்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்க நடவடிக்கை முன்னெடுப்பு!

டிசம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக சாவகச்சேரியில் தொடரப்பட்ட வழக்கு

மே 1, 2026
இலங்கை

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இலங்கைக்கு வருகை!

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?