குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பட்டம் விடும் செயற்பாட்டால் ஏற்படக்கூடிய விமான விபத்துகள் குறித்து விமானப்படை எச்சரித்துள்ளது.
விமான ஓடு பாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானது என விமானப்படை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் நடக்கும் விமான விபத்துக்களில் ஓடு பாதைகளுக்கு அருகில் பட்டம் பறப்பதும் முக்கிய காரணங்களில் ஒன்று எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விமானங்கள் பறப்பதற்கு தடையாக பட்டம் பறப்பது இருப்பதாகவும் கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குராக்கொட,பலாலி, கட்டுகுருந்த, சீன்குடா, கொக்கல, வவுனியா, வீரவில, மத்தள போன்ற பகுதிகளில் ஓடு பாதைகளுக்கருகில் அடிக்கடி பட்டங்கள் பறப்பது மிகவும் ஆபத்தான பிரச்சினை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
