Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்துக்கான நிதி ஒதுக்கப்படும் – ஆளுநர் நா.வேதநாயகன்

அக்டோபர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்துக்கான மூலத்திட்டம் (Master plan) வடக்கு மாகாண பொறியியலாளர் சங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபையால் படிப்படியாக நிதி ஒதுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்தில் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்திரநிலா மணிமண்டபம் வடக்கு மாகாண ஆளுநரால் இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இங்கு ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவித்ததாவது,

நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் 2017ஆம் ஆண்டுதான் இந்தக் கல்லுண்டாய் குடியேற்றக் கிராமம் உருவாக்கப்பட்டது.

இந்தக் கிராமத்துக்கு மக்களின் பல தேவைகள் இன்னமும் முழுமைப்படுத்திக் கொடுக்கப்படவேண்டியுள்ளன.

நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் உங்களுக்கான அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதைப்போல நீங்கள்தான் உங்கள் கிராமத்தை, வீட்டை முன்னேற்றுவதற்கு உழைக்கவேண்டும். உங்களின் அக்கறையிலும் அர்ப்பணிப்பிலும்தான் அதன் வெற்றி தங்கியிருக்கின்றது.

இந்த மணிமண்டபத்தை நிறுவுவதில் பல இடர்களை எதிர்கொண்டமை எனக்குத் தெரியும். ஆனாலும், மிகச் சிறப்பாக இதை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். இங்குள்ள மக்கள்தான் இதனை மிக அழகாக அப்படியே பாதுகாத்து பயன்படுத்த வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் எமது மக்களுக்கு உதவி செய்வதற்கு விரும்புகின்றார்கள். ஆனால் இங்குள்ள சிலர் அவர்களை ஏமாற்றுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மோசடி செய்கின்றனர்.

அதனால் புலம்பெயர்ந்தவர்கள் உதவி செய்வதற்கு பின்னடிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதன் ஊடாகவும் அவர்களின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாமல் நடப்பதன் ஊடாகவுமே வெற்றிகரமாக திட்டங்களைச் செயற்படுத்தலாம்.

இந்தக் கிராமம் மேலும் வளர்ச்சியடையவேண்டும். அதற்கு மாகாணசபை ஊடாக வழங்கக் கூடிய உதவிகளை வழங்குவேன், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில், சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பிரதேச செயலர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மன்னாரில் சுகாதார சீர்கேடான உணவகத்தின் மீது நடவடிக்கை
அடுத்த செய்தி யாழில் அணையா விளக்கு தூபி உடைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு

ஜூன் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல்!

செப்டம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

மோடிக்கு எச்சரிக்கை விடுத்த தீவிரவாதிகள்

ஏப்ரல் 23, 2025
இலங்கை

கார் மோதியதில் இரு எருமை மாடுகள் உயிரிழப்பு.

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?