பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 5.6 கிலோகிராம் நிறையுடைய ஹஷிஷ் போதைப்பொருளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றவாளியான மிதிகம ருவானின்’நண்பர் ஒருவர் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.