தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர்கள் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 35 ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் , சிறப்பு விருந்தினர்களாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுப்புன் விஜரத்ன மற்றும் யாழ்ப்பாண மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் சு.கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஓட்டம், குண்டெறிதல், தட்டெறிதல், உதைபந்தாட்டம், கயிறுழுத்தல், உட்பட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதனையடுத்து, போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றிக்கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் விருந்தினர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.