உள நல நாளினை முன்னிட்டு குடும்ப உறவுகளிற்கான விளையாட்டு நிகழ்வு இன்று வவுனியா, சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றிருந்தது.
இதன் போது பிரதம விருந்தினர்களினர்களிற்கு மாலை அணிவித்து பாண்ட் வாத்தியம் முழங்க அழைத்துவரப்பட்டிருந்தனர்.
அத்துடன் அம்மாக்கள் அணி மற்றும் மகள்கள் அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியும், அப்பாக்கள் அணி மற்றும் மகன்கள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றிருந்தது.
சமளங்குளம் பாடசாலை அதிபர் கே. கணேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விலே பிரதம விருந்தினராக தெற்கு வலயக் கல்வி பணிப்பாளர் ரி.முகுந்தன் மற்றும் கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.