பண்டாரவளை ரயில் நிலையத்தில் இடம்பெறவிருந்த துயர சம்பவம் ஒன்று ஒன்பது வயது சிறுமியின் செயலால் தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து தடுத்துநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.
ஆர்க்கிமிடிஸ் சர்வதேச பாடசாலையில் 5 ஆம் வகுப்பு படிக்கும் செனுகி ஹியாரா என்ற சிறுமி, ரயில் நிலையத்தில் தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ரயில் பெட்டியின் கீழ் தண்டவாளத்தில் தொங்கிய நிலையில் ஒரு நபரைக் கண்டுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி உடனடியாக ரயில் நிலைய அதிபரிடம் ஓடிச் சென்று அவருக்குத் தகவல் கொடுத்தாதுள்ளார்.
ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 42 வயது நபரை மீட்டு, சிறுமியின் செயல்களைப் பாராட்டியதாக ரயில் நிலைய அதிபரான நலின் வெரங்கா கூறினார்.
பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த நபர், குடும்பப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசி என அடையாளம் காணப்பட்டார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுமி எச்சரிக்கை எழுப்பும் வரை அவர் ரயிலுக்கு அடியில் கிடப்பதை வேறு யாரும் பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

