வெற்றிமாறன் இயக்கம் தனது 49வது திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன், நடித்து வருகிறார்.
கலைப்புலி எஸ்.தாணு இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இந்த படம் குறித்த ப்ரோமோவை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வெளியிட உள்ளதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக சிம்பு- வெற்றிமாறன் இணைவதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.
இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக வெற்றி மாறன் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.