Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நெடுந்தீவில் வாள் வெட்டு சம்பவம்!

செப்டம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்திய நிலையில் , ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து , கைது செய்துள்ளனர்.

நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர்கள் குழு ஒன்று மது விருந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் போது , மோட்டார் சைக்கிள் வீதியில் செல்வோரை வாள்களை வீசி அச்சுறுத்தியவாறு பயணித்த வன்முறை கும்பல், விருந்தினர் விடுதிக்குள் சென்று , அங்கு மது விருந்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை , தாக்குதலாளிகள் பொலிஸார் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதன் போது, தாக்குதலாளிகளில் ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளதுடன் , தப்பி சென்ற ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் இரண்டாயிரம் பேர் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வேலைவாய்ப்பு திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்!
அடுத்த செய்தி யாழ் கொழும்புத்துறை மீன்பிடி, இறங்குதுறை கடற்தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது ஐக்கிய மக்கள் சக்தி!

மார்ச் 26, 2025
இலங்கை

சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தவுள்ளோம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பரவல்

மார்ச் 7, 2026
இலங்கை

இலங்கையில் தேசிக்காயின் விலை சடுதியாக அதிகரிப்பு!

அக்டோபர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?