முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அதுரலியே ரத்தன தேரரை பிணையில் விடுவிக்க நுகேகொடை மேலதிக நீதவான் இன்றையதினம் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் தேரருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு தனிப்பட்ட பிணைகளும், 10,000 ரூபாய் ரொக்கப் பிணையும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் 2020 இல் வேதனிகம விலமதிஸ்ஸ தேரரை கடத்திச் சென்று மிரட்டிய சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தன தேரரை கைதுசெய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஆகஸ்ட் 29 ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியதை தொடர்ந்து அத்துரலியே ரத்தன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
