நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டம் தற்போது அரசுக்கெதிரான போராட்டமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உள்துறை அமைச்சர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் இராம்நாத் அதிகாரி ஆகியோர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்
மேலும் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியும் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் அவரை பாதுகாப்பான இடத்திற்கு அந்நாட்டு ராணுவம் அழைத்து செல்லவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
