கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் ஜனிதா பெரேரா இன்றையதினம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
பிரசன்ன ரணவீர கிரிபத்கொடை நகரிலுள்ள அரச காணியொன்றை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதயன்படி அடுத்த தவணையில் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும்போது, இவரின் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலைப்படுத்தப்படாமல் ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
