மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் வழக்கில் நேற்றைய தினம் கைதான பியல் மனம்பேரியை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் இன்று (07) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் பியல் மனம்பேரி ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
